Women Empowerment: உலகிலேயே அதிக பெண் விமானிகளை கொண்ட நாடு இந்தியா

நாட்டின் மொத்த விமானிகளின் எண்ணிக்கையில் 15 சதவீதம் பெண்கள் இருப்பதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்தார். இதுவே, மற்ற நாடுகளில் 5 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.  

2022 பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பாதியில் மக்களவையில் பேசிய மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, நாட்டின் மொத்த விமானி பலத்தில் 15 சதவீதம் பெண்கள் என்று கூறினார். 

“உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும், 5 சதவீத விமானிகள் மட்டுமே பெண்கள். இந்தியாவில், 15 சதவீதத்திற்கும் அதிகமான விமானிகள் பெண்களாக உள்ளனர். இது பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மத்திய அரசின் சாதனைகளுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு. கடந்த 20-25 ஆண்டுகளில் விமானப் போக்குவரத்துத் துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

2020ம் ஆண்டில் சர்வதேச மகளிர் விமான விமானிகள் சங்கம் தொகுத்துள்ள தரவுகளின்படி, மற்ற நாடுகளை விட 12.4 சதவீத பெண் வணிக விமானிகளுடன், உலகிலேயே அதிக பெண் விமானிகளின் விகிதத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

9.9 சதவீத பெண் விமானிகளுடன் அயர்லாந்து அடுத்த இடத்தில் உள்ளது. இந்தத் ட்தரவுகள் ஒரு வருடத்திற்கு முன்பு தொகுக்கப்பட்டன, அதன் பின்னர், இந்த எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

சிறிய பிராந்திய விமான நிறுவனங்கள் 13.9 சதவீத பாலின விகிதத்துடன் பெண் விமானிகளை அதிக அளவில் பணியமர்த்துவதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. மேலும் தெரிவிக்கிறது.

அதே நேரத்தில் சரக்கு விமான நிறுவனங்கள் இந்தியாவில் 8.5 சதவீத விகிதத்தில் பெண் விமானிகளைக் கொண்டுள்ளன.

மேலும் படிக்க |  விமான நிலையத்தில் தரையிறங்கும் முன் விமானிக்கு ஹார்ட் அட்டாக்

கேப்டன் ஜோயா அகர்வால், உலகின் மிக நீளமான விமானப் பாதையான சான் பிரான்சிஸ்கோவிலிருந்து பெங்களூருக்கு நேரடி விமானத்தை இயக்கிய பெண் விமானி என்ற சாதனைப் பதிவை ஏற்படுத்தியுள்ளார்.

ஏர் இந்தியா விமானத்தில் கேப்டன் ஜோயா அகர்வால் இந்த சாதனையை பதிவு செய்தார். இந்திய பெண் விமானிகள் சமீபத்தில் உலக அளவில் பேசப்படுகிறார்கள்.

பெண் விமானிகளின் எண்ணிக்கையை பொறுத்த அளவில் உலகளவில், அயர்லாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது, தென்னாப்பிரிக்கா 9.8 சதவீத பெண் விமானிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

கனடா 6.9 சதவீத விகிதத்தில் நான்காவது இடத்தில் உள்ளது. ஐந்தாவது இடத்தில் ஜெர்மனி 6.9 சதவீதத்துடன் உள்ளது. மறுபுறம், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் முறையே 5.4 மற்றும் 4.7 சதவீத பெண் விமானிகள் உள்ளனர்.

மேலும் படிக்க | விமானியின் சாதுர்யத்தால் தப்பிய உயிர்கள்

இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை மாறியுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, புதிய தொழில்நுட்பத்துடன் வரும் நாட்களில் பைலட் உரிமம் எளிமைப்படுத்தப்படும் என்றார்.

33 புதிய உள்நாட்டு சரக்கு டெர்மினல்களை உருவாக்கவும், விமானிகளுக்காக 15 புதிய விமானப் பயிற்சிப் பள்ளிகளை அமைக்கவும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், ட்ரோன் துறையில் கவனம் செலுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

2025 ஆம் ஆண்டிற்குள் 220 புதிய விமான நிலையங்களை உருவாக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் கூறினார். 2022-23 ஆம் ஆண்டிற்கான சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் மானியங்களுக்கான கோரிக்கைகளுக்கு பதிலளித்த சிந்தியா, கோவிட்-ன் போது உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணங்களில் இந்தியா முன்னேறியுள்ளதாக கூறினார். 

மேலும் படிக்க | முகக்கவசம் அணிந்திருக்கும் போது போனை அன்லாக் செய்வது எப்படி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR

Read More | https://zeenews.india.com/tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *